மீண்டும் மாஸ்டர் பட கூட்டணி? அப்டேட்டிற்காக ரசிகர்கள் வெயிட்டிங்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் இவருடன் சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, மிஸ்கின், மன்சூர் அலிகான் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத்த் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித் குமார் தயாரிக்கிறார்.

இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் காஷ்மீர் மாநிலத்தில்  தற்போது நடைபெற்று முடிந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் துவங்க இருக்கின்றன. இதற்காக பட குழு முழு வீச்சில் தயாராகி வருகிறது. படம் ஆரம்பித்த நாள் முதலே பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வந்த  லியோ படக்குழு விரைவிலேயே மேலும் ஒரு அறிவிப்பை வெளியிடுமென ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தளபதி விஜய் மற்றும்  லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் இணைந்து பணியாற்றிய மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தில்  வில்லன் கதாபாத்திரத்தில்  நடித்திருந்தார் விஜய் சேதுபதி. தற்போது  லியோ படத்திற்கும் பின்னணி குரலுக்காக விஜய் சேதுபதி இடம் மூன்று நாள் கால்சீட் வாங்கியுள்ளதாக  செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இதனால் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜயும் விஜய் சேதுபதியும் லீயோ படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக தமிழ் சினிமா ரசிகர்கள் குஷியில் உள்ளனர். மேலும் இது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற லியோ படத்திலிருந்து வரும் அறிவிப்புகளை பார்க்கும் போது இந்தத் திரைப்படமும் லோகேஷ் யுனிவர்சலில்  வரும் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay and vijay sethupathi going to team up for leo update will announce soon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->