விஜயின் சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் குழந்தை இந்த நடிகரா.?! ஆச்சர்ய தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு  முழுவதும் முடிவடைந்துவிட்டதாக படக்குழு  அறிவித்திருந்தது. விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதனைத்தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில், நடிகர் விஜயின் சிறுவயது புகைப்படத்தில் கையில் ஒரு குழந்தையுடன் அமர்ந்திருப்பார். இந்த குழந்தை யார் என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அது நடிகர் விக்ராந்த் தானாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay childhood photos viral 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->