ரோகிணி திரையரங்கை சூறையாடிய விஜய் ரசிகர்கள் - நடந்தது என்ன?  - Seithipunal
Seithipunal


ரோகிணி திரையரங்கை சூறையாடிய விஜய் ரசிகர்கள் - நடந்தது என்ன? 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் லியோ. அனிருத் இசை அமைத்துள்ள இந்தத் திரைப்படம் வரும் 19-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தில் த்ரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், லியோ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு நேற்று மாலை சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் நடைபெற்றது. இந்த டிரெய்லரை காண விஜய் ரசிகர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரோகிணி திரையரங்கின் முன்பு குவிந்தனர்.

அங்கு அவர்கள் பட்டாசு வெடித்தும், "லியோ லியோ" என்று கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். அதன் பின்னர் 6.30 மணிக்கு லியோ டிரெய்லரை ரசிகர்கள் ஆரவாரத்தோடு கண்டு ரசித்தனர்.

அதே நேரத்தில் ஆயிரக்கணக்கில் வந்திருந்த ரசிகர்கள் இருக்கையின் மீது தாறுமாறாக ஏரி நின்று சேர்களை நாசம் செய்தனர். ரசிகர்களின் இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay fans broke chair and tables rohini theatre


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->