விஜய் என்னை நாற்காலியால் தாக்கினார், அடிபட்டுவிட்டது- இயக்குநர் மிஷ்கின் - Seithipunal
Seithipunal


தற்போதைய சூழ்நிலையில் எந்த பக்கம் திரும்பினாலும், லியோ படத்தின் பேச்சு தான் என்றே கூறலாம். இந்த படத்தில் நடித்த நடிகர்களை எங்கு பார்த்தாலும், லியோ படம் குறித்து தான் கேள்விகள் கேட்கப்படுகிறது. லியோ படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன் தாஸ், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விஜய் நடிப்பதாலும், லோகேஷ் கணகராஜ் இயக்குவதாலும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறிவருகிறது. இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் பாடிய நா ரெடிதான் வரவா பாடல் வெளியாகி இதுவரை 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் என்று தெரிகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. அன்மையில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது.

இந்நிலையில் இன்று இயக்குநர் மிஷ்கின் பிரபல தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் லியோ படப்பிடிப்பில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். லியோ படத்தில் வரும் ஒரு காட்சிக்காக விஜய் ஒரு நாற்காலியை எடுத்து என்னை அடிக்க வேண்டும். அந்த காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது உண்மையான நாற்காலி கிடையாது. அட்டையில் செய்யப்பட்ட போலி நாற்காலி தான்.

இருந்தாலும் அது கொஞ்சம் கனமாக இருந்ததால், விஜய் அதை எடுத்து என்னை அடிக்க மிகவும் யோசித்தார். இயக்குநர் லோகேஷ் கணகராஜ் வந்து இது முக்கியமான காட்சி என்று கூறியதும் தான் ஒத்துக்கொண்டார். அந்த பெரிய நாற்காலியை எடுத்து அவர் என்னை வேகமாக அடித்தார். அப்போது எனக்கு உண்மையாகவே அடிபட்டுவிட்டது என்று மிஷ்கின் தெரிவித்துள்ளார். அதற்கு கூட விஜய் வருத்தப்பட்டார் என்று மிஷ்கின் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vijay hit me using a chair myskin reveals


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->