விஷாலின் மார்க் ஆண்டனி படத்தில் தளபதி விஜய்.? ட்விட்டரில் ட்ரெண்டாகும் பதிவு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி உட்பட பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

இதில், மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இதனிடையே 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்றை  வெளியிட்டு இருந்தது. அந்த வகையில், மார்க் ஆண்டனி படத்தின் டீஸர் இன்று மாலை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

இதனையடுத்து இன்று நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் #ThalapathyVijayForMarkAntony என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து தற்போது ரசிகர்கள் ட்விட்டரில் #ThalapathyVijayForMarkAntony ட்ரண்ட் செய்து மார்க் ஆண்டனி படத்தில் தளபதி விஜய் நடித்துள்ளதாக பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படக்குழு நடிகர் விஜயை நேரில் சந்தித்து மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டீசரை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay release Vishal in Mark Antony movie teaser


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->