சிம்பு பிறந்தநாளுக்கு சிறப்பு வீடியோ வெளியிட்ட "தக் லைப்" படக்குழு..!
The Thug Life team released a special video for Simbu birthday
கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் 36 வருடங்களுக்குப் பிறகு உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இந்த படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படம் வரும் ஜூன் 05-ந் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.
நேற்று நடிகர் சிம்பு தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில், 'தக் லைப்' படக்குழு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு சிம்புவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. நடிகர் கமல்ஹாசனுடன் சிம்பு முதல்முறையாக இணைந்து நடித்துள்ள 'தக் லைப்' படத்தின் புதிய வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
வீடியோவில் சட்டை பட்டன்களை அவிழ்த்துவிட்டு நெகட்டிவ் ஷேட் தோற்றத்தில் சிம்பு ஸ்டைலாக நிற்கும் அந்த வீடியோ அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
https://x.com/i/status/1886414341806920147
English Summary
The Thug Life team released a special video for Simbu birthday