விநாயகர் சதுர்த்தி எதிரொலி : நடிகை சிம்ரனின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், 80 மற்றும் 90 கிட்ஸ்களின் கனவு நாயகியாக கொடிகட்டி பறந்த நடிகை சிம்ரன், தனது திருமணத்துக்கு பின்னர்  சில காலங்கள்  சினிமாவை விட்டு விலகி இருந்த நிலையில், தற்போது மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்து வருகிறார்.

நடிகை சிம்ரன் சமீபத்தில் வெளியான 'அந்தகன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும்  வணங்காமுடி, சப்தம், துருவ நட்சத்திரம் ஆகிய படங்களை  கைவசம் வைத்துள்ள நிலையில், இவை அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில்  சிம்ரன் அடுத்ததாக லோகேஷ் குமார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ள நிலையில், இந்த படத்திற்கு தி லாஸ்ட் ஒன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், தீப்க் பக்கா இப்படத்தை தயாரிக்கவுள்ளார். படத்தின் பிற நடிகர்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 'தி லாஸ்ட் ஒன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை சிம்ரன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vinayagar Chaturthi Echo Actress Simrans New Movie First Look Poster Released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->