லட்சுமி மேனனுடன் திருமணம்?  நேரம் வரும்போது அறிவிப்பேன்.. விஷால் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தற்போது 45 வயதாகும் விஷாலுக்கு எப்போது திருமணமாகும் என திரை பிரபலங்களும், ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பிரபல நடிகை லட்சுமி மேனன், விஷாலை திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் இணையத்தில் தீயாக பரவி வந்தது. 

இதனையடுத்து விஷால் தனது திருமணம் குறித்து சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்த பதிவில், 'பொதுவாக என்னைப் பற்றிய எந்த போலி செய்திகளுக்கும் அல்லது வதந்திகளுக்கும் நான் பதில் அளிப்பதில்லை. அது பயனற்றது என்று தான் நான் உணர்கிறேன். ஆனால் இப்போது லட்சுமி மேனனுடனான எனது திருமணம் குறித்த வதந்தி பரவி வருகிறது. இதை நான் முழுமையாக மறுக்கிறேன் இது முற்றிலும் பொய் மற்றும் ஆதாரமற்றது.

என்னுடைய பதிலுக்கு காரணம் அதில் ஒரு பெண் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பது தான். அவர் நடிகை என்பது பிறகு முதலில் அவர் ஒரு பெண். நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆக்கிரமித்து கெடுக்கிறீர்கள்.


எதிர்காலத்தில் நான் யாரை திருமணம் செய்யப் போகிறேன் என்பதை முடிவு செய்வதற்கு பெர்முடா முக்கோணம் அல்ல. நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்." என தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் அனுஷா ரெட்டி என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் திடீரென திருமணம் நின்று போனது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vishal explain about marriage to Lakshmi Menon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->