பிரபல இளம் நடிகையை திருமணம் செய்யும் விஷால்? அட பெண் இவர் தானா? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் லட்சுமிமேனன். இதனைத் தொடர்ந்து விஷால், விக்ரம் பிரபு, கார்த்தி, அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையானார்.

அதன் பின்னர் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டுமென பல திரைப்படங்களை வேண்டாம் என கூறி ஒதுக்கி வந்த நிலையில், தற்போது வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார். தற்போது இவர் லாரன்ஸ் நடிப்பில் பி.வாசு இயக்கும் சந்திரமுகி 2 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் லட்சுமி மேனன், விஷாலை திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. நடிகர் விஷால், அனுஷா ரெட்டி என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் திடீரென திருமணம் நின்று போனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் ஆகிய திரைப்படங்களில் தனக்கு ஜோடியாக நடித்த லட்சுமி மேனனை திருமணம் செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vishal marriage to Lakshmi Menon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->