பாடகராக அவதாரம் எடுத்த நடிகர் விஷால்.. மார்க் ஆண்டனி படக்குழு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மார்க் ஆண்டனி படத்தின் தெலுங்கு பாடலை நடிகர் விஷால் பாடியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

 
இதனிடையே நேற்று இந்த படத்தின் முதல் பாடல் வரும் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என படுக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் மார்க் ஆண்டனி படத்தில் முதல் பாடலை விஷால் பாடியுள்ளார். 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் விஷால், "மார்க் ஆண்டனி தெலுங்கு மதிப்பிற்காக ஒரு பாடலை பாடியது ஒரு அற்புதமான உணர்வு மேலும் இந்த படத்தில் பாடகராகவும் அறிமுகமாவது பெரும் மகிழ்ச்சி பாடகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஒரு பாடலை பாடுவதற்கு நீங்கள் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும் என்பதை பார்க்கிறேன்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vishal Sing a song in Mark Anthony movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->