அரசியலில் விஜய்யுடன் கூட்டணி வைப்பீர்களா.? ரஜினி ஸ்டைலில் பதிலளித்த விஷால்.! - Seithipunal
Seithipunal


விஜய் அரசியல் கட்சி தொடங்கினால் அவருடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும் என நடிகர் விஷால் பதிலளித்துள்ளார்.

நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் எனவும் கூறப்படுகிறது. அதன்படி, தளபதி 68 திரைப்படத்தை முடித்துவிட்டு சினிமாவை விட்டு விலக போவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வரும் செப்டம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனையடுத்து இதற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஷால் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் விஜய் அரசியல் கட்சி தொடங்கினால் அந்த கட்சியுடன் நீங்கள் கூட்டணி வைப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் கடவுள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

கடவுள் என்ன செய்யச் சொல்கிறாரோ அதை நான் செய்வேன். எதிர்காலத்தில் எது நடந்தாலும் அது கடவுளின் அருளால் தான் நடக்கும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் என்பது என்னை பொருத்தவரை ஒரு சமூக சேவை அது பிசினஸ் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vishal speech about vijay politics


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->