அன்னதானம்... எப்போது... எப்படி கொடுக்க வேண்டும்? அன்னதானத்தால் கிடைக்கும் பலன்கள்.! - Seithipunal
Seithipunal


மனிதனிடம் கட்டாயம் இருக்க வேண்டிய தானம், நிதானம். 'பதறாத காரியம் சிதறாது" என்பார்கள். அதேபோல் நிதானத்தோடு இருந்தால் மட்டுமே நிம்மதி கிடைக்கும்.

தானத்தில், நிதானம் முக்கியம்தான். ஆனால், அதைவிட முக்கியமானது பிறரின் பசியை போக்கும் அன்னதானம். மனிதன், 'போதும்" என்று சொல்லக்கூடிய ஒரே தானம், அன்னதானம் தான்.

அன்னதானத்தின் சிறப்பு :

ஒருவரிடத்தில் பொன், பொருள், ஆடை, ஆபரணங்கள், பணம் கொடுத்தால் இன்னும் கொஞ்சம் தரலாமே என மனம் எதிர்பார்க்குமே தவிர, போதும் என்று சொல்வதில்லை.

ஆனால், சாப்பிடும்போது வயிறு நிறைந்தவுடன் போதும் என்று கட்டாயம் சொல்லித்தான் ஆக வேண்டும். ஒருவருக்கு வயிறார உணவை அளித்தால், மனம் நிம்மதி பெறும். இதை பெரும்பாலானோர் அனுபவத்தில் உணர்ந்து இருப்பார்கள்.

'போதும்" என்ற சொல்லே, அன்னதானம் செய்பவர்களுக்கு போதுமான செல்வத்தை கொடுக்குமாம். எனவேதான், எல்லா தானங்களிலும் அன்னதானமே சிறந்தது என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். அன்னதானம் செய்யும்போது, பிறர் 'போதும்" என்று சொல்லும் அளவிற்கு செய்ய வேண்டும்.

எப்படி அன்னதானம் செய்ய வேண்டும்?

அன்னதானம் செய்பவர்கள், தாங்கள் சாப்பிடாமல் இருந்து மற்றவர்களுக்கு தங்களது குடும்பத்தினருடன் பரிமாற வேண்டும்.

தங்கள் கரங்களால் பரிமாறுவதே சிறப்பு.

பெரிய அளவிற்கு அன்னதானம் செய்ய முடியாதவர்கள் கூட சிறிய அளவில் தங்களால் முடிந்ததை செய்யலாம்.

அன்னதானத்தை தங்கள் மேற்பார்வையில் முறையாக செய்ய வேண்டும்.

எப்போதெல்லாம் அன்னதானம் கொடுக்கலாம்?

வாரம் ஒருவருக்கு அல்லது மாதம் ஒருவருக்கு உணவு வழங்கலாம்.

வருடம் ஒருமுறை விழாக்களை முன்னிட்டு அன்னதானம் வழங்கலாம்.

பிறந்த நாள்

திருமண நாள்

குழந்தைகளின் பிறந்தநாள்

முன்னோர்களின் நினைவு நாள் ஆகிய நாட்களிலும்

இறைவனுக்கு உகந்த நாட்களிலும் அன்னதானம் செய்யலாம்.

அன்னதானம் செய்ய இயலாதவர்கள், 'பசி" என்று சொல்லி வருபவர்களுக்கு முகமலர்ச்சியோடு உணவளித்தாலே போதும். அதுவே அன்னதானத்திற்கு சமமானதுதான். இதனால் இறைவன் உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் அமர்ந்து, எந்நாளும் உதவி செய்வான் என்பது உண்மை.

பாத யாத்திரை வருபவர்களுக்கும்

ஸ்தல யாத்திரை வருபவர்களுக்கும்

கிரிவலம் வருபவர்களுக்கும்

நடந்து வருபவர்களுக்கும்

களைப்பை போக்க பல இடங்களில் பலரும் உணவளிக்கின்றனர்.

அதன்மூலம் அவர்களது ஆத்மாக்கள் திருப்தியுடன் நம்மை வாழ்த்துகிறது.

அன்னதானத்தால் கிடைக்கும் பலன்கள் :

அன்புடனும், கருணையுடனும் செய்யும் அன்னதானங்கள், நம்முடைய அடுத்த பிறவி வரை பலன் கொடுக்கும்.

அன்னதானம் செய்பவர்களின் வாழ்க்கையில் பசிப்பிணி வராது.

இறைவனின் பரிபூரண அருளும் கிடைக்கப்பெறும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annathanam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->