சமந்தா நடிக்கும் சுபம் படத்தின் ட்ரெய்லர்.!!
samantha in subam movie trailer released
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான சிட்டாடல் தொடரில் நடித்திருந்தார். தற்போது, மேலும் ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார்.

இதுவரைக்கும் நடிகையாக மட்டுமே வலம் வந்த சமந்தா தற்போது தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அதன்படி, சமந்தா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸின் கீழ் "சுபம்" என்ற படத்தை தயாரித்துள்ளார். பிரவீன் காந்த்ரேகுலா இயக்கும் இந்தப்படத்தில் பல புது முகங்கள் நடித்திருக்கின்றனர்.
இந்தப்படம் வருகிற 9-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் சமந்தா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
English Summary
samantha in subam movie trailer released