நாளை பத்ம விருதுகள் வழங்கு விழா: டெல்லி செல்லும் நடிகர் அஜித்குமார்...!
Padma Awards ceremony tomorrow Actor Ajith Kumar to go to Delhi
குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கௌரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில், 2025-ஆம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரி 25-ஆம் தேதி அறிவித்தது.

அதன்படி, தமிழகத்தை சேர்ந்த நடிகரும் கார் ரேசருமான அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகிய 03 பேருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருதுஅறிவித்தது.
அத்துடன், தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. குறித்த விருது விழா நாளை டெல்லியில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், குடியரசுத் தலைவரிடமிருந்து பத்மபூஷன் விருதை நடிகர் அஜித்குமார் வாங்க உள்ளார். இதற்காக அஜித் குமார் இன்று தனது குடும்பத்தினருடன் டெல்லி செல்கிறார்.
English Summary
Padma Awards ceremony tomorrow Actor Ajith Kumar to go to Delhi