கஞ்சாவுடன் கைதான கேரள இயக்குநர்கள் காலித் ரகுமான், அஷ்ரப் ஹம்சா! உடனடி ஜாமீனில் விடுதலை!
cinema Director Arrest Alappuzha Gymkhana
கேரள சினிமா உலகம், சமீப காலமாக நடிகைகள் மீது பாலியல் தொல்லை புகார்களும், போதைப்பொருள் சம்பந்தமான விவகாரங்களும் காரணமாக கடும் பரபரப்பை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ, ஓட்டலில் நடந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு சோதனையில் மாடியில் இருந்து குதித்து தப்பிய சம்பவம் பெரும் விவாதத்தை கிளப்பியது. விசாரணைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டாலும், நடிகை வின்சி, ஷைன் டாம் சாக்கோ தன்னை போதைப்பொருள் போதையில் தவறாக அணுகியதாக புகார் அளித்தார்.
இதற்கிடையே, மலையாள திரையுலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில், இயக்குநர்கள் காலித் ரகுமான் மற்றும் அஷ்ரப் ஹம்சா ஆகியோர் கலப்பின கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டனர். கொச்சியில் ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிர் வீட்டில் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்த போது, சோதனை நடத்தி அவர்களிடம் இருந்து 1½ கிராம் கலப்பின கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மூன்றாவது நபர் ஷாகித் முகமது என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட மூவரும், உடனடி பரிசோதனையில் போதை உபயோகம் நடக்கவில்லை என்பதால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். போதைப்பொருள் பெற்ற ஆதாரங்களை கண்டறியும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
English Summary
cinema Director Arrest Alappuzha Gymkhana