குறிப்பிட்ட பொறியியல் படிப்புகளில் சேர 12ஆம் வகுப்பில் கணிதம், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டியதில்லை.. வெளியான அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


குறிப்பிட்ட பொறியியல் படிப்புகளில் சேர 12ஆம் வகுப்பில் கணிதம், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டியதில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்பதற்கும் மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை என்று கூறப்பட்டாலும், ஆண்டுதோறும் பொறியியல் கலந்தாய்வில் லட்சக்கணக்கான மாணவர்கள் தொடர்ந்து பங்கேற்று கொண்டு வருகின்றனர். பொறியியல் படிப்பில் பல்வேறு வகை உள்ளது. இயந்திரவியல்,  மின்னியல், சிவில், வேதியியல், பொருளாதாரம், இயற்பியல், கணிதம், புவியியல், கணிதம் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொறியியல் உள்ளது. 

பொறியியல்  படிப்பதற்கு பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம், வேதியியல் போன்ற பாடங்கள் இடம் பெற்றிருக்க வேண்டியது என்பது வழக்கம். இந்நிலையில், குறிப்பிட்ட பொறியியல்  படிப்பதற்கு பாடங்களில் சேர பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம். வேதியியல் படங்கள் அவசியமில்லை என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் அறிவித்துள்ளது. 

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம், 2020 - 2023 ஆம் கல்வி ஆண்டுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதில் கணித அறிவியல், மின் மற்றும் மின்னணு பொறியியல் படிப்பில் சேர வேதியியல் படிப்பது கட்டாயம் இல்லை என்றும், பொறியியல் பிரிவில் மூன்றில் ஒரு பங்கு படிப்புகளில் சேருவதற்கு 12ஆம் வகுப்பில் கணிதம் கட்டாயமில்லை என்றும் தெரிவித்துள்ளது. வேளாண் பொறியியல் உணவு பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் படிப்புகளில் சேர 12ஆம் வகுப்பில் கணிதம் கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AICTM New announcement


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->