மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு: முழு விவரம் இதோ.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு காலியாக உள்ள பொறியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

அதன்படி துணை இயக்குநர்,  பயிற்சி அலுவலர், உதவி இயக்குநர், உள்துறை வடிவமைப்பு, துணை ஆணையர், உதவிக் கட்டுப்பாட்டாளர் மற்றும் அலங்காரம், பயிற்சி அலுவலர் உள்ளிட்ட 17 பதவியிடங்களுக்ககான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்காக விண்ணப்பிப்போர் பிஇ, பி.டெக், பி.எஸ்சி., எம்.எஸ்சி., எம்.பி.பி.எஸ் போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

பதவிக்கேற்ப 30 வயதுக்கு மேல் 50 வயதிற்குள் - ஆண், பெண் பாலினத்தவா் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைபடி 3 முதல் 15 வருடங்கள் வயது தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

விண்ணப்பிக்க தகுதியானோர் https://upsc.gov.in அல்லது http://www.upsconline.nic.in. என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கடைசி நாள்: வருகின்ற மே 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt Jobs Details


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->