2025 பட்ஜெட்டில் மின்சார வாகன வளர்ச்சிக்கு அதிரடி! Budget 2025 மின்சார வாகன துறைக்கு அடித்தது ஜாக்பாட்: அதிரடியாக குறையும் மின்சார வாகனங்களின் விலை! - Seithipunal
Seithipunal


மின்சார வாகனத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கமைய, 2025-26 யூனியன் பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லித்தியம் பேட்டரிகளுக்கான சுங்க வரியை முழுமையாக ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த முடிவு, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், இறக்குமதி சார்ந்திருப்பதை குறைக்கவும், மின்சார வாகனங்கள் மற்றும் மின்னணுவியல் சாதனங்களை மலிவாக வழங்கவும் உதவுவதாக கருதப்படுகிறது. குறிப்பாக, கோபால்ட், லித்தியம்-அயன் பேட்டரி ஸ்கிராப், ஈயம், துத்தநாகம் உள்ளிட்ட 12 முக்கிய தாதுக்களின் மீதான அடிப்படை சுங்க வரி (BCD) நீக்கப்பட்டுள்ளது.

இந்த வரி விலக்குகள் EV பேட்டரி உற்பத்திக்கான 35 முக்கிய பொருட்கள் மற்றும் மொபைல் பேட்டரி உற்பத்திக்கான 28 பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், EV மற்றும் மொபைல் பேட்டரிகள் தயாரிப்பதற்காக தேவைப்படும் இயந்திரங்கள், உற்பத்தி கருவிகள் மற்றும் மூலப்பொருட்களை இந்திய நிறுவனங்கள் கூடுதல் வரி செலுத்தாமல் இறக்குமதி செய்ய முடியும்.

இதன் மூலம் Ola Electric, Tata Motors, Reliance போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் பேட்டரி உற்பத்தியை விரைவாக வளர்க்க வழிவகுக்கும். இதன் விளைவாக மின்சார வாகன உற்பத்தி செலவு குறையும் மற்றும் பெரும்பாலான மக்களும் மலிவான EVகளை வாங்கும் வாய்ப்பு உருவாகும்.

லார்ட்ஸ் மார்க் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எம்.டி. சச்சிதானந்த் உபாத்யாய், "இந்த அறிவிப்பு இந்தியாவின் தூய்மையான தொழில்நுட்ப உற்பத்தியை மேம்படுத்தும் முக்கியமான கட்டமாகும்" என்று தெரிவித்தார்.

இந்த முடிவின் மூலம், சீனா மற்றும் பிற நாடுகளை சார்ந்திருக்கும் நிலை குறைந்து, உள்நாட்டு மின்சார வாகன சந்தை புதிய உயரங்களை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டும் அல்லாது, இந்தியாவின் சுத்தமான எரிசக்தி வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என வல்லுநர்கள் நம்புகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Action for the development of electric vehicles in the 2025 budget Budget 2025 has hit the jackpot for the electric vehicle industry the price of electric vehicles will drop dramatically


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->