பொறியியல் படிப்பில் சேர அவகாசம் நீட்டிப்பு.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..! - Seithipunal
Seithipunal


பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலமாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மே 6ம் தேதி இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியது. ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், அன்றைய தினம் வரை மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

 

மேலும் அவர்களில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 12 பேர் கட்டணம் செலுத்தியும், 1 லட்சத்து 78 ஆயிரத்து 180 பேர் சான்றிதழ் பதிவேற்றமும் செய்துள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்தது. இந்நிலையில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு செய்ய ஜூன் 11ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதையடுத்து ஜூலை 10ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொறியியல் படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் https://www.tneaonline.org/user/login அல்லது http://www.dte.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து, பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

 

கூடுதல் விவரங்களுக்கு: https://www.tneaonline.org என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம் என்றும், தாங்களே விண்ணப்பிக்க முடியாதவர்கள் சிறப்பு சேவை மையங்கள் மூலமாக தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களையும், தொழில்நுட்ப இயக்ககம் வெளியிட்டுள்ளது.

 

தொடர்பு எண்‌: 044 - 2235 1014 / 044 - 2235 1015

அழைப்பு எண்‌: 1800 - 425 - 0110


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Duration Extended To Apply Engineering Courses


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->