முதுநிலை மருத்துவப் படிப்பில் பணிக்காலம் ஐந்து ஆண்டுகளாக மாற்றம்.!
five years allotment for govt doctors in post graduate medical course
முதுநிலை மருத்துவப் படிப்பில் பணிக்காலம் ஐந்து ஆண்டுகளாக மாற்றம்.!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்டி, எம்எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மொத்தம் 2,100 இடங்கள் உள்ளன. அதில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றது.
மீதமுள்ள மாநில இடங்களை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் கலந்தாய்வு மூலம் நிரப்பி வருகிறது. அவற்றில் 525 இடங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் எம்பிபிஎஸ் நிறைவு செய்த மருத்துவா்களுக்கு உள் ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படுகிறது.
அப்படி நிரப்பும் போது அவா்கள் முதுநிலை படிப்பை நிறைவு செய்த பிறகு இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவ மையங்களில் சேவையாற்ற வேண்டும் என்பது விதி. இந்த நிலையில், நடப்பாண்டில் அந்த விதி மாற்றப்பட்டுள்ளது. அதாவது, அரசு மருத்துவ சேவைகளில் முதுநிலைப் படிப்புக்குப் பிறகு ஐந்தாண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற புதிய வரையறை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக அதிகாரிகள் தெரிவித்ததாவது: "அரசு மருத்துவா்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் முதுநிலை மருத்துவம் பயின்றவா்கள் அதற்கு பிறகு தனியாா் மருத்துவ சேவைக்கோ அல்லது வெளிநாட்டுக்கோ சென்றால் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவா்களுக்கு பற்றாக்குறை ஏற்படக்கூடும்.
English Summary
five years allotment for govt doctors in post graduate medical course