அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள் - பிரபல ஐடி நிறுவனம் போட்ட அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான ஹெச்சிஎல் நிறுவனம், தனது ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது, HCL நிறுவனத்தில் வீட்டில் இருந்து பணியாற்றும் பணியாளர்களை அலுவலகம் வர வைக்கும் வகையில் புதிய நடைமுறை கொண்டு வரப்படவுள்ளது.

கொரோனா காலத்தில் வீட்டில் பணிபுரியும் ஹெச்சிஎல் டெக் ஊழியர்கள் வாரத்தில் குறைந்தது 3 நாட்களும், மாதத்தில் குறைந்தது 12 நாட்களும் அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டும். 

ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர தவறினால், அவர்கள் எத்தனை நாள் அலுவலகத்திற்கு வராமல் இருக்கிறார்களோ, அதற்கு இணையாக ஒவ்வொரு நாளுக்கும் அவர்களின் விடுமுறை நாட்கள் கழிக்கப்படும்.

இந்த நிலையில் hcl நிறுவனத்தின் HR டிபார்ட்மென்ட் இந்த புதிய முறை அமலாக்கம் செய்யப்படும் என்றும், இந்த நடைமுறை ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாகவும், விதிமுறைகளை மதிக்காதவர்களின் விடுமுறை நாள் குறையும், போதுமான விடுமுறை நாட்கள் இல்லாதவர்களின் சம்பளம் குறைக்கப்படும் என்றும் மின்னஞ்சல்கள் மூலம் ஊழியர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hcl company order to employees come to work in office


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->