தமிழகத்தில் உயர்க்விக் கட்டணம் உயருகிறதா? - Seithipunal
Seithipunal


உயர்க்கல்வி படிப்புகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்று அமைத்துள்ளது. இந்த குழுவிடம் தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் கல்வி கட்டணம் உயர்வு குறித்த விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் படி இந்தக் குழு தமிழகத்தில் மூன்று வகையான உயர்கல்வி படிப்புகளுக்கு புதிய கட்டணங்களை நிர்ணயம் செய்வதற்காக விண்ணப்பங்களை பெற்றுள்ளது. அந்த விண்ணப்பத்தில், பி.இ., பி.டெக், உள்ளிட்ட பொறியியல் படிப்புகள், பாரா மெடிக்கல் என்று 17 வகையான துணை மருத்துவப் படிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை நடத்தும் கல்லூரிகள் கட்டண உயர்வு குறித்த விண்ணப்பங்களை அளித்துள்ளன.

இவற்றில், பொறியியல் படிப்புகளை நடத்தும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகங்கள், 25% வரை கட்டண உயர்வுக்கு கோரிக்கை வைத்துள்ளன. அந்தக் கோரிக்கையின் படி, நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புகள், துணை மருத்துவப் படிப்புகள் மற்றும் கல்வியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பொறியியல் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.50,000 எனவும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் 85 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளன.

புதிதாக மாற்றி அமைக்கப்படும் புதிய கல்விக் கட்டணம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். அப்படி நடைமுறைக்கு வரும் புதிய கல்விக் கட்டணம் அடுத்த மூன்று கல்வி ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்" என்று தெரிவிக்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

higher education fees will raised in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->