2 ஆம் கட்ட ஜேஇஇ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!!
jee exam hall ticket released
மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்தத் தேர்வு ஜேஇஇ முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என்று இரண்டு பிரிவாக நடைபெறும்.
இதில் முதன்மை தேர்வு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கட்டங்களாக தேசிய தேர்வுகள் முகமை சார்பில் நடத்தப்படுகிறது. அதன் படி 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு கடந்த ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட்டது. சுமார் 13 லட்சம் பேர் எழுதிய இந்தத் தேர்வின் முடிவுகள் பிப்ரவரி 11-ம் தேதி வெளியிடப்பட்டன.

இதைத் தொடர்ந்து, ஜேஇஇ 2-ம்கட்ட முதன்மை தேர்வு வரும் ஏப்ரல் 2 முதல் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 2-ம் கட்ட ஜேஇஇ தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்களை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டை jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களை nta.ac.in என்ற தளத்தில் அறியலாம். 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி எண்கள், jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டும் விளக்கம் பெறலாம்.
English Summary
jee exam hall ticket released