"இந்து அறநிலையத்துறையில் வேலை; தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்!
Job opportunity in Covai maasani temple
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாசாணியம்மன் திருக்கோயிலில், மருத்துவ மையம் அமைக்கப்பட உள்ளது. அந்த மருத்துவ மையத்தில் பணிபுரிய மருத்துவ அலுவலர், செவிலியர் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் , ஆகிய பணிகளுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
இந்த வேலைக்கான விண்ணப்பங்களுக்கு கட்டணம் எதுவும் கிடையாது. தேவைப்படுவோர் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது hrce.tn.gov.in என்கிற இணையதள மூலமோ அல்லது ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைக்கான விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் , வரும் 11ம் தேதி (11.06.2023) ஆகும். கல்வி தகுதி தமிழில் எழுத படிக்க மட்டும் தெரிந்தால் போதும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமும் ,தகுதியும் உள்ளவர்கள் காலதாமதம் படுத்தாமல் உடனடியாக விண்ணப்பம் பெற கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
English Summary
Job opportunity in Covai maasani temple