கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்ததன் எதிரொலி..விவிஐபி பாஸ்கள் ரத்து..யோகி ஆதித்யநாத் அதிரடி! - Seithipunal
Seithipunal


கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்த நிலையில், அதி முக்கிய பிரபலங்களுக்கான சிறப்பு பாஸ் வழங்குவதை ரத்து செய்யும்படி உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் நேற்று அமாவாசையை ஒட்டி புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு இதில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். அதில் 25 பேரது உடல் அடையாளம் காணப்பட்டது என்றும் மேலும் காயமடைந்த 60 பேரில், 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அம்மாநில அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததற்கு, உத்தரப்பிரதேச மாநில அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறி விஷால் திவாரி என்ற வழக்கறிஞர் சுப்ரீம்கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அவர் தொடர்ந்துள்ள இந்த பொதுநல வழக்கில், கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், உத்தரப்பிரதேச மாநில அரசின் நிர்வாக குளறுபடி, அலட்சியம் மற்றும் பாதுகாப்பு குறைப்பாட்டை சுட்டிக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த நிலையில், மகா கும்பமேளாவில் இன்றுமுதல் பிப்ரவரி 4-ம் தேதி வரை VVIP எனப்படும் அதி முக்கிய பிரபலங்களுக்கான சிறப்பு பாஸ் வழங்குவதை ரத்து செய்யும்படி அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் மகா கும்பமேளா நடைபெறும் பகுதி நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

நேற்று இரவு பல்வேறு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும், பக்தர்கள் செல்லும் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது என்றும் எந்த வாகனத்துக்கும் சிறப்பு அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அயோத்தி, வாரணாசி, லக்னோ உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கி வரும் சாலைகளில் இடையூறின்றி வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்ய உத்கரவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Stampede kills 30 people VVIP passes cancelled Yogi Adityanath in action


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->