அஞ்சல் துறையில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


அஞ்சல் துறையில் 78 ஓட்டுனர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. இந்த ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட அனைத்து தகுதியினையும் பெற்றிருக்க வேண்டும். அதன் விவரம் பின்வருமாறு:- 

கல்வித் தகுதி:- 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் களவாத்தியாகாத இலகுரக மற்றும் கனரக வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும். 

முன் அனுபவம் :- 

வாகன ஓட்டுதலில் மூன்று வருட அனுபவம் இருக்க வேண்டும். 

ஊதியம்:-

ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும். 

வயது வரம்பு:- 

18 - 27 வயது

வயது வரம்பில் பொதுப் பிரிவினருக்கு மூன்று வருடம் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடங்களும் மத்திய அரசில் பணிபுரிந்தவர்களுக்கு 40 வயது வரையிலும், விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த பணியில் விருப்பம் உடைய நபர்கள் தங்களது விண்ணப்பத்தை தபால் மூலம் இணையதளத்தில் குறிப்பிட்ட முகவரியில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 09.02.2024 ஆகும். மேலும், இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை அறிய indiaposts.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancies of post office department


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->