மதுரை இளைஞர்களுக்கு குட் நியூஸ் - 35,000 சம்பளத்தில் உடனடி வேலை.!
job vacancy in madurai district
மதுரை மாவட்டத்தில், காலியாக உள்ள மாவட்ட வள பயிற்றுநர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:-
மாவட்ட வள பயிற்றுநர் – ஊரக வளர்ச்சி / சமூக பணி / பண்ணை சாராத வாழ்வாதார வணிக மேலாண்மை தொடர்பான பட்டய படிப்பு பெற்றவராக இருக்க வேண்டும். வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
முன் அனுபவம்:-
குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் முதல் 10 வருடங்களுக்கு மேல் முன் அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:-
https://madurai.nic.in/ என்ற வலைதள முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பின்பு பூர்த்தி செய்த விண்ணப்பத்தை திட்ட மற்றும் துணை இயக்குநர், மாவட்ட இணை மேலாண்மை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மதுரை என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
சம்பளம்:-
20,000 முதல் 35,000 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:-
10.9.2024 பிற்பகல் 3 மணிக்குள் தாமதமாகவோ, நாள் கடந்த வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடாது. இந்த வேலைவாய்ப்புக் குறித்து மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள 9442748405 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
English Summary
job vacancy in madurai district