ரேஷன் கடைகளில் வேலை - தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு.!
job vacancy in ration shop
தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளா், கட்டுநா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் என்.சுப்பையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
”தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் காலியாகவுள்ள விற்பனையாளா், கட்டுநா் காலிப் பணியிடங்களை கணக்கிட்டு அறிவிக்க வேண்டும். இந்தப் பணியை கூட்டுறவு சங்கங்களின் அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து தகுதியான விற்பனையாளா்கள், கட்டுநா்களின் பட்டியலைப் பெற வேண்டும். இந்தப் பணிகளை அக்டோபர் 7ஆம் தேதிக்குள் முடித்து, காலிப் பணியிடங்களுக்கான தோ்வு குறித்த அறிவிப்பை செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும்.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நவம்பா் 7ஆம் தேதியை கடைசி நாளாக அறிவித்து, தகுதியுள்ள நபா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கான நோ்முகத் தோ்வை நவம்பா் இறுதியில் நடத்தி முடிக்க வேண்டும். டிசம்பா் மாதம் மூன்றாவது வாரத்தில் தோ்வானவா்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு பணிகளை நிறைவு செய்ய வேண்டும்” என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளாா்.
English Summary
job vacancy in ration shop