மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு எப்போது? - வெளியான அதிகாரபூர்வத் தகவல்.!
medical course second phase counselling start tomarrow
மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு எப்போது? - வெளியான அதிகாரபூர்வத் தகவல்.!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கும், சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதற்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கி கடந்த 14-ந் தேதியுடன் நிறைவுபெற்றது. இதில் ஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள் அந்தந்த கல்லூரிகளில் தற்போது சேர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், மீதம் உள்ள காலியிடங்களுக்கான 2-வது சுற்று கலந்தாய்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தற்போது வெளியிட்டுள்ளது.
அதில், "நாளை முதல் 2-வது சுற்று கலந்தாய்வு தொடங்கி நடைபெற உள்ளது. விருப்ப இடங்களை தேர்வு செய்வது, ஒதுக்கீடு ஆணை பெறுவது, கல்லூரிகளில் சேருவது என்று அவகாசம் வழங்கப்பட்டு அடுத்த மாதம் 4-ந் தேதியுடன் கலந்தாய்வு நிறைவுபெற உள்ளது.
அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள 118 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், 648 நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், அதேபோல் 85 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களுக்கும், 818 நிர்வாக ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களுக்கும் இரண்டாவது சுற்று கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
medical course second phase counselling start tomarrow