#BREAKING:: 12ம் வகுப்பு தேர்வு முடிவு.."தேதி மாற்றம் செய்யப்படும்".. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்யப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வில் தமிழகத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதினர்.

இந்த நிலையில் மே 5ம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாக்குவதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

வரும் 7ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளதால் அதனை கருத்தில் கொண்டு 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியில் மாற்றம் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான புதிய தேதி அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளதால் திட்டமிட்டபடி மே 5ம் தேதி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானால் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படலாம் என்பதால் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் தேதி மாற்றம் செய்ய உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Anbil Mahesh announced 12th exam result date will be changed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->