நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வு தேதிகள் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களமான ஐ.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்பில் சேர்வதற்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதே போன்று நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வும் நடைபெறுகிறது. இதற்கான தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டிற்கான ஜே.இ.இ மற்றும் நீட் நுழைவுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஜே.இ.இ முதன்மை தேர்வுகள் முதல் கட்டமாக ஜன. 24, 25, 27, 28, 29, 30, 31 ஆகிய தேதிகளிலும், இரண்டாம் கட்டமாக ஏப். 6, 8, 10, 11, 12 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது.

அதேபோன்று மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களுக்கான க்யூட் தேர்வு மே 21 முதல் 31 வரையிலும், வேளாண் படிப்புகளுக்கான ஐ.சி.ஏ.ஆர் தேர்வு ஏப்.26, 27, 28 மற்றும் 29ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான விண்ணப்பம் மற்றும் இதர அறிவிப்புகள் www.nta.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என இந்திய தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NEET and JEE Exam Dates announced


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->