ஜேஇஇ தேர்வில் புதிய கட்டுபாடு விதிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு ஜேஇஇ எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த வருடத்திற்கான தேர்வுகள் ஜனவரி 24ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கான முடிவுகள் பிப்ரவரி 12ம் தேதி வௌியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஜேஇஇ தேர்வு எழுதும் மாணவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் ஜேஇஇ மாணவர்களுக்கு கழிப்பறை இடைவேளைக்கு பிறகும் பயோமெட்ரிக் வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வௌியிட்டுள்ள அறிவிப்பில், “ஜேஇஇ மாணவர்களுக்கு ஏற்கனவே நிறைய விதிமுறைகள் உள்ளன. ஆனால் எவ்வித முறைகேடுகளும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 

அதன்படி தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் கழிப்பறை இடைவேளைக்கு சென்று வந்த பிறகும் முழுவதும் சோதனை செய்யப்பட வேண்டும். அவர்கள் மீண்டும் பயோமெட்ரிக் வருகை பதிவையும் செய்ய வேண்டும். தேர்வு அறையில் உள்ள அதிகாரிகள், பணியாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் சிற்றுண்டி தர வரும் உதவியாளர்கள் அனைவருக்கும் இந்த நடைமுறை கடைப்பிடிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new restriction in JEE exam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->