அடிப்படை டேஷ் கூட இல்லாமல் பேசும் சீமான் - பொதுவெளியில் பொளந்துகட்டிய வருண்குமார் ips -ன் வழக்கறிஞர்.!
varunkumar ips lawyer press meet about seeman
திருச்சி முன்னாள் எஸ்.பி.,யும் தற்போதைய டி.ஐ.ஜி.,யுமான வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பேசுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வருண்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வருண்குமார் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். இந்த நிலையில் சீமான் மீது வருண்குமார் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக வருண் குமாரின் வழக்கறிஞர், முரளி கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதாவது, நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்பொழுது சீமான் மீண்டும் மீண்டும் கீழ்த்தரமான முறையில் டிஐஜி வருண் குமார் குறித்து பேசியுள்ளார்.
ஐ.பி.எஸ். என்பது மிக உயர்ந்த பதவி. அதை சாதாரண பதவி போல் சீமான் குறிப்பிட்டு விமர்சித்து பேசுகிறார். ஐபிஎஸ் படிப்பை பற்றி விமர்சிப்பதற்கு சீமானுக்கு என்ன கல்வித் தகுதி இருக்கிறது?
மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போல சீமான் பேசுகிறார். அடிப்படை டேஷ் அறிவு கூட இல்லாமல் பேசும் சீமானுக்கு எவ்வளவு பதில் சொன்னாலும் பிரயோஜனம் இல்லை" என்றுத் தெரிவித்தார்.
English Summary
varunkumar ips lawyer press meet about seeman