மஹாராஷ்டிராவில் 'கல்வியில் காவி' கட்டாயமாக திணிப்பதாக புகார்..! - Seithipunal
Seithipunal


மஹாராஷ்டிராவில் 3ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்ட வரைவை அம்மாநில அரசு தயாரித்துள்ளது. அதில் பண்டைய பாரம்பரியத்தை பாதுகாப்போம் என்ற பெயரில் பகவத் கீதை மற்றும் இந்து துறவியான ராம்தாஸ் சுவாமி தொடர்பான கதைகளை மாணவர்களை படிக்க சொல்லலாம் என்று அந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பண்டைய இந்திய பாரம்பரியம் முதல் தற்போதைய இந்திய கல்விக் கொள்கை வரை அனைத்தையும் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிகிறது. அந்தவகையில் பள்ளிப் பாடத்திட்ட வரைவில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த துறவிகள், பழங்குடி மக்கள் குறித்து பெரும்பாலான தகவல்கள் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்து மத நூல்கள், ஆர்யபட்டா, யோகா, இந்திய துறவிகள், ரிஷிகள், வானிலை ஆராய்ச்சிகள், கணிதம் குறித்து மாணவர்கள் முழுவதும் அறிந்து கொள்ளும் நோக்கில் இவை திட்ட வரைவில் சேர்க்கப்பட்டுள்ளதாக மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து முன்னாள் மகாராஷ்டிர கல்வி இயக்குனர் வசந்த் காலா பாண்டே கூறுகையில், " இந்திய அறிவு அமைப்பு பகுதியில் பண்டைய கலாச்சாரம் மற்றும் கண்டுபிடிப்புகள், சர்வதேச பிரச்சினைகளை சேர்த்துக்கொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.

மேலும் கல்வியாளர் கிஷோர் இதுகுறித்து கூறுகையில், "இது கல்வியில் காவியை கட்டாயமாகத் திணிக்கும் முயற்சியாகும்" என்று கூறியுள்ளார். மேலும் பல அரசியல் தலைவர்களும் கல்வித்துறையின் இந்த திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new syllabus launched including bagavat gita in maharashtra schools


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->