#BigBreaking || ஆன்லைன் செமஸ்டர் எக்ஸாம் இப்படித்தான் நடக்கும்..., முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்.! - Seithipunal
Seithipunal


வருகின்ற பிப்ரவரி 1 லிருந்து 20 வரை ஆன்லைன் மூலமாக அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களிலும் ஆன்லைன் மூலமாகவே செமஸ்டர் தேர்வுகள் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று, கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

அதன்படி, பிஇ, பிடெக், பி ஆர்க் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் இன்று காலை வெளியிட்டுள்ளது. அதில், வருகின்ற பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் மார்ச் மாதம் முதல் வாரம் வரை காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் இந்த தேர்வுகள் நடைபெறும் என்று, அண்ணா பல்கலைக்கழகம் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆன்லைன் செமஸ்டர் தேர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
 
அதன்படி, மாணவர்கள் அனைவரும் தங்களுடைய இருந்த இடத்திலிருந்தே தேர்வு எழுதக்கூடிய டேக் ஹோம் என்ற முறையில் இந்தத் தேர்வு நடைபெறும் என்றும், கூகுள் கிளாஸ் ரூம் அல்லது மின்னஞ்சல் வழியாக வினாத்தாள்கள் அனுப்பப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், தேர்வு எழுதிய விடைத்தாள்களை அஞ்சல் அல்லது கொரியர் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும் என்றும், நேரில் வந்து தர வேண்டாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்துள்ளது.

விடைத்தாள்களில் பதிவு எண், பெயர், பாடத்தின் குறியீடு, பாடத்தின் பெயர் உள்ளிட்டவை ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிட வேண்டும் என்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ONLINEEXAM AnnaUniversity Engineering


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->