கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என உறுதி செய்ய தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை உறுதி செய்ய தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுபறைக்கு வெளியில் நிற்கவைக்க கூடாது என்றும் மாணவர்களின் பெற்றோர்களை அவமானகரமாகவும், தரக்குறைவாகவும் பேச கூடாது எனறும் சில தினங்களுக்கு முன்பு
பள்ளிக் கல்வித்துறை உத்ததவு பிறப்பித்தது.

இந்நிலையில் இந்த உத்தரவை தனியார் பள்ளிகள் முறையாக பின்பற்றுகிறதா என்பதை உறுதி செய்யும்படி உறுதிமொழி சான்று தர அனைத்து தனியார் பளளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், தமிழக அரசின் உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறது எனவும் உறுதிமொழி சான்று அளிக்கும்படி அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,சான்றிதழ் கொடுத்த பள்ளிகள் மீதும் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Order for private schools


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->