ஆகாய தாமரைகள் மூலம் காகிதமா!!! இது புதுசா இருக்கே சார்...!
Paper through the lotuses of the sky It's new sir It's new
திருச்சியைச் சேர்ந்த இளம் பெண் ஆராய்ச்சியாளர் வீட்டிலேயே ஆகாயத்தாமரையை வைத்து காகிதம் செய்வது தான் அவருடைய கண்டுபிடிப்பு. தமிழகத்தில் நீர்நிலைகளில் பெரும் பிரச்சனையாக இருந்து வரும் ஆகாயத்தாமரைகளை வைத்து வருமானம் ஈட்டும் வகையில் கண்டுபிடிப்பானது உள்ளது.
நீர்நிலைகளில் படர்ந்து காணப்படும் ஆகாயத் தாமரைகளால் தண்ணீர்ப் பெரிதும் மாசடைவதுடன் மீன்கள் போன்ற உயிரினங்கள் சுவாசிப்பதற்குத் தேவையான ஆக்சிஜனும் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதனால் நீர்களில் வாழும் உயிரினங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
இதை அழிப்பதற்காகத் தமிழக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது. கைகளாலும் இயந்திரங்களாலும் பல இடத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்றியது. இருப்பினும் ஆகாயத்தாமரையின் விதை அங்கங்கே சிதறி கிடப்பதால் வெகுவாக வளர்ந்து விடுகின்றன. அதனை அழைக்கப் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்தினால் நீர்நிலைகள் காசு போடுவதுடன் மீன்களும் பாதிக்கப்படும். எனவே இம்முயற்சியானது கைவிடப்பட்டது.

அகற்றும் முயற்சிகள்:
இதைத் தொடர்ந்து இதற்கான தீர்வு ஒன்றை இப்போது கிடைத்துள்ளன. திருச்சியைச் சேர்ந்த சுஷ்மிதா என்ற இளம் ஆராய்ச்சியாளர்,"மறுசுழற்சி மூலம் ஆகாயத்தாமரைகளைப் பயனுள்ளதாக மாற்றவும் இது தொடர்பான அவருடைய ஆராய்ச்சியின் நல்ல பலனை அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்". இந்த ஆராய்ச்சியானது,ஆகாயத் தாமரைகளை பறித்து வெயிலில் காயவைத்து விற்பனைச் செய்தாலே ஒரு கிலோவுக்கு 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விலைப் போகும் என்று கூறுகின்றனர்.
தீர்வு கிட்டியது:
வழக்கமாக மரத்திலிருந்து காகிதக்குள் தயாரிக்க 60% வரை ரசாயனம் சேர்க்க வேண்டி உள்ளது. ஆனால் ஆகாயத் தாமரையிலிருந்து தயாரிக்க அது தேவையில்லை. இது கண்டிப்பாகச் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை ஆகவே இருக்கும்" எனக் கூறியுள்ளார்.
காகிதத் தொழிற்சாலைகளை நடத்துபவர்களுக்கு இதன் மூலமாக மிகப் பெரிய அளவில் வருவாய் ஈட்டுவதற்கான வழி உள்ளது. மேலும் இதன் மூலம் உறுதியாக மாசு இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும்.

காகிதம் செய்யும் முறை:
வாய்க்கால், குளங்கள் , ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஆகாயத்தாமரைகளைப் பறித்து அதன் தண்டுகள் மற்றும் இலைகளை நன்கு வெயிலில் காயவைத்து அதன் பிறகு அரைத்துக் கோலக்கி அச்சில் வார்த்து மீண்டும் வெயிலில் காய வைத்தால் போதும் காகிதம் தயாராகிவிடும்.
சிறு தொழில்கள்:
இந்த ஆராய்ச்சியைச் சிறுதொழில் மற்றும் கைத்தொழில் செய்பவர்களுக்கு எடுத்துச் சென்றால் இது ஒரு நல்ல வருவாய் ஈட்டும் பொருளாக இருக்கும். இது மூலம் தொழில் முனைவோர்க்குப் பெரும் உதவியாகவும் நல்ல வாய்ப்பாகவும் அமையும். முக்கியமாகக் காகித தொழில் செய்பவர்களுக்கு இது ஒரு நல்ல வளமாகச் செயல்படும்.
இந்த நல்ல முயற்சியைத் திட்டமாக மக்கள் மத்தியில் கொண்டு சென்றால் நீர்நிலைகளும் பாதுகாக்கப்படும் இதனை ஒரு இயக்கமாக நடைமுறைப்படுத்தினால் வீட்டுக்கு வீடு இனி ஆகாயத் தாமரை மூலம் காகிதம் தயாரிப்பது குடிசைத் தொழிலாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Paper through the lotuses of the sky It's new sir It's new