தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நிரந்தரமாக ரத்து.! வெளியான பரபரப்பு தகவல்.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டங்களையும், பதினொன்றாம் வகுப்பில் படிக்கும் போதே மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் நடத்துவதால், மாணவர்களின் கல்வி கற்றல் திறன் இழந்து வருவதாக தமிழக அரசுக்கு புகார்கள் வந்தன.

இதனையடுத்து பதினொன்றாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு முறையை தமிழக அரசு கொண்டு வந்தது. இதற்கு தனியார் பள்ளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், கல்வியாளர்கள் மத்தியில் இதற்க்கு வரவேற்பும் இருந்தது.

தனியார் பள்ளிகளின் நிர்பந்தத்தால் பதினொன்றாம் வகுப்புக்கு பொதுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் உயர்கல்வி சேர்க்கைக்கு கணக்கில் கொள்ளப்படாது. பதினொன்றாம் வகுப்புக்கு தனி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. 

இந்நிலையில், பதினொன்றாம் வகுப்புக்கு நிரந்தரமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பதினொன்றாம் வகுப்புக்கு பொதுத்தேர்வை ரத்து செய்தாலும், தனியார் பள்ளிகளின் நிர்பந்தத்தை தவிர்க்க மாவட்ட அளவிலான தேர்வை முறைப்படுத்தவும், இதுகுறித்து, பரிந்துரை அறிக்கை ஒன்று தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், முதல்வரின் அனுமதி கிடைத்தபின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் வெளியான அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PLUS ONE BOARD EXAM INFO


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->