பிடித்து படியுங்கள்.. புரிந்து படியுங்கள்.. படித்ததை நினைவில் வைத்து கொள்வது எப்படி?!
public exam tips for part 4
புரிந்து படியுங்கள்:
மாணவர்கள் அனைவரும் தாங்கள் பயிலும் பாடத்தினை புரிந்து படித்தால் மட்டுமே தங்களுடைய இலக்கை எட்ட முடியும். ஏனென்றால் இந்த போட்டி நிறைந்த உலகில் மதிப்பெண்களுக்காக புத்தகத்தில் உள்ள அனைத்தையும் மனப்பாடம் செய்து அதை அப்படியே தேர்வில் எழுதினால் மதிப்பெண்களுக்கு மட்டுமே உதவும். தங்களுடைய அறிவை பெருக்கிக் கொள்ள அது உதவாது. ஒரு பாடத்தை புரிந்து படிப்பது மாணவர்களின் எதிர்காலத்திற்கும் சிறந்தது.
மனப்பாடம் செய்யும் பழக்கம் மாணவர்களை நல்ல திறமையுள்ள மனிதர்களாக உருவாக்காது. புரிந்து கொண்டு படித்தால் நீண்டநாள் உங்கள் மனதில் நிற்கும்.
படித்ததை மறந்துவிடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
படிப்பவை மனதில் நிற்க உடனடியாக எழுதி பாருங்கள். எழுதும்போது மாணவர்கள் எந்த இடத்தில் தவறு செய்கிறார்கள் என்பது புலப்படும்.
மையக்கருத்து என்பது அந்த பாடம் அல்லது கேள்வியின் விடையை ஒரே வரியில் புரிந்து கொள்வது மட்டுமே. படிக்க ஆரம்பிக்கும் முன் பாடத்தின் மையக்கருத்தை புரிந்து படியுங்கள்.
கணக்கில் உள்ள ஃபார்முலாக்களை எழுதி வைத்து மனப்பாடம் செய்யுங்கள்.
கணக்குகளை எழுதி எழுதி பயிற்சி செய்யுங்கள். முதலில் தவறானாலும் தொடர்ந்து முயற்சியுங்கள்.
ஒரு குழுவாக அமர்ந்து பயிற்சி செய்து பாருங்கள். ஒருவர் சோர்ந்து போகும் போது மற்றவர் தேற்ற வேண்டும்.
தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப்பாடங்களை இலக்கண பிழை இல்லாமல் எழுதினால் அதிக மதிப்பெண் பெற முடியும்.
மாணவர்கள் எளிதில் மதிப்பெண் பெறவும், தேர்ச்சி பெறவும் மனப்பாட பகுதிகள் துணை நிற்கும்.
அறிவியல் பாடங்களில் வரும் விதிகள் போன்றவற்றை நம் சொந்த வார்த்தையில் எழுதக்கூடாது. மாறாக புத்தகத்தில் உள்ளது போல் அப்படியே எழுத வேண்டும்.
பாடங்களை ஒரு நோட்டில் குறிப்புகளாக எடுத்து கொள்ளவும். அதாவது, முக்கிய வார்த்தைகளை வைத்து (hiவெ) குறிப்பு எடுத்து கொள்ளவும். இது பரீட்சைக்கு படிக்கும் இறுதி நேரத்தில் உங்களுடைய நேரத்தை மிச்சப்படுத்தும்.
சமூக அறிவியல் பாடங்களில் உள்ள ஆண்டுகளையும், நாடுகள் மற்றும் முக்கியமானவர்களையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
தாங்கள் எதைக் கற்றாலும் அதை படமாக கற்றால் தங்களுடைய மூளையில் சென்று ஆழமாக பதிந்து கொள்ளும்.
எந்த வினாவினை படித்தாலும் அந்த வினாவினை படித்து முடித்தபின் எழுதிப் பார்க்கவும் அதை நீங்களே திருத்துங்கள். அப்பொழுதுதான் நீங்கள் செய்யும் பிழைகளை திருத்திக் கொள்ள உதவும்.
English Summary
public exam tips for part 4