பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: முழு விவரம் இதோ...
Public Sector Undertakings Jobs Details
பொதுத்துறை நிறுவனமான எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ஹைதராபாத் அலுவலகத்தில் தொழில்நுட்ப (கிரேடு II) பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதவி மற்றும் காலியிடங்களின் விவரங்கள்.
பதவி: Electronics Mechanic 7
பதவி: Electrician 6
பதவி: Machinist 7
பதவி: Fitter 10
தகுதி: 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட துறையில் ITI முடித்து தொழிற்பழகுநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 20,480
வயதுவரம்பு: 13.4.2024 தேதியின்படி 27 க்குள்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
எழுத்துத் தேர்வு: சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத், புதுதில்லி, மும்பை, நாக்பூர், நெய்டா போன்ற இடங்களில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.ecil.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கடைசி நாள்: 20.5.2024
English Summary
Public Sector Undertakings Jobs Details