பட்டதாரிகளுக்கு ஓர் அறிய வாய்ப்பு... ரூபாய் தாள் அச்சிடும் நிறுவனத்தில் வேலை: முழு விவரம் இதோ.! - Seithipunal
Seithipunal


இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் கர்நாடகா, மைசூரில் செயல்பட்டு வரும் ரூபாய் தாள் அச்சிடும் பொதுத் துறை நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணி: Process Assistant Grade-I(Non-Executive Cadre)

காலியிடங்கள்: 39

பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:

1. Mechanical - 10

2. Electrical - 4

3. Electronics - 5

4. Chemical - 6

5. Pulp & Paper - 6

6. Civil - 2

7. Chemistry - 2

8. Accounts Assistant - 2

9. Office Assistant - 2

சம்பளம்: மாதம் ரூ.24,500

வயதுவரம்பு: 30.6.2024 தேதிபடி 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், பல்ப் மற்றும் பேப்பர் போன்ற பிரிவுகளில் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

குறைந்தபட்சம் 60 % மதிப்பெண்களுடன் வேதியியல் பிரிவில் பி.எஸ்சி முடித்திருப்பவர்கள் மற்றும் பி.காம் மற்றும் ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும்.

பெங்களூரு மற்றும் மைசூரில் எழுத்துத் தேர்வு நடைபெறும். மற்ற விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.200. இதர அனைத்து பிரிவினரும் ரூ.600 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் www.bnpmindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவுடன் பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும்போது அசல் சான்றிதழ்களுடன் இதனை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.6.2024


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rupee Printing Company Jobs Details


கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?




Seithipunal
--> -->