பேராசிரியர் பணிக்கு வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான புதிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழக அரசில் 155 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

மூத்த விரிவுரையாளர்கள் பணியில் 24 காலியிடங்கள், விரிவுரையாளர்கள் பணியில் 82 காலியிடங்கள், இளநிலை விரிவுரையாளர்கள் பணியில் 49 காலியிடங்கள் உள்ளன. இதற்கு மாதம் சம்பளம் ரூ.36.400-1,15,700 வரை வழங்கப்படும்.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 57 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும், ஏதாவதொரு பாடங்களில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் மற்றும் குறைந்தது 55 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.இடி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் ஏதாவதொரு ஒர் பாடத்தில் படித்திருக்க வேண்டும். முதுநிலை விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இதற்கு தகுதியானவர்கள், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். .

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ரூ.500 விண்ணப்பக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்சி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 மட்டும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu Govt Employment Professor Posts


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->