பள்ளி மாணவர்கள் ''பழைய பஸ் பாஸ்'' பயன்படுத்தலாமா?... - வெளியான அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பள்ளிகள் திறக்கும் நாளிலேயே இலவச நோட்டுகள், புத்தகங்கள் வழங்கும் வகையில் பள்ளி கல்வித்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இதற்கிடையே கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அரசு பேருந்துகளில் மாணவர்கள் அன்றைய தினம் முதலே இலவசமாக பயணிக்கலாமா அல்லது புதிய பஸ் பாஸ் வாங்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இது குறித்து போக்குவரத்து கழகத்தின் உயர் அதிகாரி தெரிவித்திருப்பதாவது, அரசு பேருந்துகளில் மாணவர்களிடம் பஸ் பாஸ் கேட்க மாட்டோம். பழைய பஸ் பாஸ் மூலம் பயணிக்கலாம். 

பள்ளி சீருடை அணிந்து இருந்தால் இலவசமாக பயணிக்கலாம். இந்த ஆண்டு மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்காக கல்வித்துறையில் இருந்து மாணவர்களின் விவரங்கள் பெறப்பட்டு விரைந்து ஆன்லைன் மூலம் புதிய பஸ் பாஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu school students travel old bus pass


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->