பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தேதி! இன்று மாலை அறிவிக்கப்படுகிறது.!
Ten Plus Two Class Public Exam Date Announcement
தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவ ஆரம்பத்தது முதல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுகுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை காரணமாக பத்து மற்றும் 12 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக பொது தேர்வுகள் நடத்தப்படாமலேயே இருந்தன.
இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காலத்தில் ஊரடங்கு மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும் 10 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்து வந்தது. கொரோனா தொற்று குறைந்து வரக்கூடிய சூழலில் கட்டுப்பாடுகளும் விலக்கிக் கொள்ளப்பட்டு பள்ளிகளும் திறக்கப்பட்டன.
தற்போது மழலையர் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு பாடங்கள் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் பாடங்கள் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்கும் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல தமிழக அரசும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவது பற்றி ஆலோசனை மேற்கொண்டது. அதனடிப்படையில் தற்போது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் போதுத் தேர்வு நடத்த செய்யப்பட்டுள்ளது.
பொது தேர்வு அட்டவனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Ten Plus Two Class Public Exam Date Announcement