தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் அனைத்து தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை.. மெட்ரிக்குலேசன் பள்ளிகள் மாவட்ட தலைவர் அறிவிப்பு.!
tirupattur district private schools today holiday
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்று முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் தனியார் பள்ளிகள் ஈடுபட உள்ளதாகவும், இதனால் தனியார் பள்ளிகள் இயங்காது என தமிழக நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தனியார் பள்ளிகள் இன்று தன்னிச்சையான விடுமுறை அறிவித்தல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. உள்ளூர் விடுமுறை விடும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி இருவருக்கு மட்டுமே உள்ளதாகவும், பேரிட காலங்கள், ஊர் திருவிழாக்கள் போன்றவற்றை முன்னிட்டு இந்த உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம் என்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தனியார் பள்ளிகளின் சங்கங்கள் தங்களாகவே பள்ளிகளுக்கு விடுமுறை விட்டுக்கொள்வது சட்ட விதிமுறையை மீறும் செயலாகும். இன்று தனியார் பள்ளிகள் தாங்களாகவே விடுமுறை விட்டுக் கொண்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சட்டவிதிமுறைப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அரியலூர் மாவட்டத்தில் அனைத்து தனியார் பள்ளிகளும் என்று இயங்கும் என மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். இயங்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் மாவட்ட தலைவர் ஏலகிரி செல்வம் அறிவித்துள்ளார்.
மேலும், புதுக்கோட்டையில் 70% தனியார் பள்ளிகள் இயங்காது என்று மாணவர்களுக்கு தொலைபேசி மூலமாக பள்ளி நிர்வாகங்கள் அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி சூறையாடியதை கண்டித்து பள்ளிகள் இயங்காது என அறிவித்துள்ளனர்.
English Summary
tirupattur district private schools today holiday