புயல் எதிரொலி: பொதுமக்களுக்கு அதிரடி தடை! சாலைகள் மூடல்! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. 

இன்று காலை 11.30 மணி நிலவரப்படி, இந்த மண்டலம் திரிகோணமலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ., நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 350 கி.மீ., புதுச்சேரியிலிருந்து தென்கிழக்கே 530 கி.மீ., மற்றும் சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. 

இந்த மண்டலம் இன்று மாலை 5.30 மணிக்குள் சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளதால் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

ஃபெங்கல் புயல் உருவாக உள்ள நிலையில், புதுச்சேரியில் இன்று காலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், புதுச்சேரியில் கடற்கரை சாலைக்கு செல்லும் அனைத்து வழிகளும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கடலூர் சில்வர் கடற்கரை சாலைக்கு செல்லும் அனைத்து வழிகளும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cyclone puducherry cuddalore beach closed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->