சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு!
TN Law College Professor job announce
தமிழ்நாட்டின் சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் மார்ச் 3, 2025,க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் மற்றும் சம்பளம்:
- பேராசிரியர் (Associate Professor) – 8 இடங்கள், மாத சம்பளம்: ₹1,31,400 - ₹2,17,100, வயது வரம்பு: 45-க்கு உட்பட.
- உதவி பேராசிரியர் (Assistant Professor) – 64 இடங்கள், மாத சம்பளம்: ₹68,900 - ₹2,05,500, வயது வரம்பு: 40-க்கு உட்பட.
- உதவி பேராசிரியர் (Pre-Law) – 60 இடங்கள், மாத சம்பளம்: ₹57,700 - ₹1,82,400, வயது வரம்பு: 40-க்கு உட்பட.
தகுதிகள்:
முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். நெட்/செட் தேர்ச்சி அவசியம். மேலும், பேராசிரியர் பணிக்கு குறைந்தது 8 ஆண்டுகள் உதவிப் பேராசிரியராக பணி அனுபவம் வேண்டும்.
தேர்வு முறை:
தமிழ்மொழி திறனறிவு தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு மே 11, 2025 அன்று நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்:
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் – ₹300, இதர பிரிவினர் – ₹500 (ஆன்லைனில் செலுத்த வேண்டும்).
விண்ணப்ப முறை:
விண்ணப்பிக்க: https://www.trb.tn.gov.in
கடைசி தேதி: மார்ச் 3, 2025.
English Summary
TN Law College Professor job announce