ரூ.58,104 கோடி வரி செலுத்தியுள்ள அதானி குழுமம்; கவுதம் அதானி தகவல்..!
Adani Group has paid Rs 58104 crore in taxes
அதானி குழுமம் துறைமுகம் முதல் மின்சாரம் வரையிலான பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால், மத்திய அரசுக்கு அதிக வரி செலுத்தும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக அதானி குழுமம் விளங்கி வருகிறது.
இந்நிலையில், அதானி குழுமம் கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.46,610 கோடி மத்திய அரசுக்கு வரியாக செலுத்தியிருந்தது. இந்த நிலையில், 2023-24-ஆம் நிதியாண்டில் அதை விட கூடுலாக வரி செலுத்தியுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ரூ.58,104 கோடியை வரியாக செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி கூறுகையில், 'இந்தியாவில் அதிக வரி செலுத்துபவர்களில் எங்களது குழுமமும் ஒன்று. அரசு நிர்வாகங்களுடன் இருக்கும் இணக்கத்தையும் மீறி, எங்களின் பொறுப்பை நாங்கள் அறிவோம்.
மேலும், இது எங்களின் நேர்மை மற்றும் பொறுப்பை வெளிக்காட்டுகிறது. நாட்டின் நிதியில் நாங்கள் வரியாக கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய் பங்களிப்பும், வெளிப்படைத்தன்மை மற்றும் நல்ல ஆட்சியின் மீதான எங்கள் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது,' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Adani Group has paid Rs 58104 crore in taxes