நீங்கள் மது பழக்கம் உள்ளவரா? ஒருமுறை குடித்தால், அது உங்கள் உடலில் இருந்து வெளியேற எவ்வளவு நேரம் எடுக்கும் தெரியுமா?!
how long takes for alcohol leave our bodies after drinking
தற்போதைய காலகட்டத்தில் மது (ஆல்கஹால்) குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. ஆண்கள் பெண்கள் என்று பாகுபாடு இல்லாமல் அனைவரும் இதனை உட்கொள்கின்றனர். அப்படி உட்கொள்ளும் பட்சத்தில் அது நமது உடலை விட்டு வெளியேற எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரத்த ஓட்டம்:
ஒருவர் ஆல்கஹாலைக் குடிக்கும் நிலையில் அது விரைவாக முதலில் நமது வயிற்றுப் பகுதி மற்றும் குடல் பகுதிக்குத் தான் செல்லும். அவ்வழியே சென்று ரத்த ஓட்டத்தில் நுழையும். வளர்ச்சிதை மாற்றத்திற்காக அதன் பின்னர் நமது கல்லீரலை நோக்கிச் செல்லும்.
கல்லீரல்:
அவ்வாறு கல்லீரலை நோக்கி சென்றடையும் பட்சத்தில் ஆல்கஹால் சிதைவதற்குக் காரணமான ஒரு சில நொதிகளைக் கல்லீரல் அசெட்டால்டிஹைடு மற்றும் அடிடேட் போன்ற குறைந்தபட்ச சேதமடையும் கூறுகளாகக் கொண்டு செல்கிறது.
முக்கிய பங்கு:
இதனைத் தொடர்ந்து அந்த ஆல்கஹால் ஆனது கார்பன் டை ஆக்சைடு ஆக வளர்சிதை மாற்றம் செய்யப்படுகிறது. அதன் பின்னர் அவை வியர்வை மற்றும் சிறுநீராக வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் ஆல்கஹால் வளர்ச்சிதை மாற்றம் செய்யப்படுவதில் கல்லீரலின் பங்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
அமில உற்பத்தி:
இந்த ஆல்கஹாலானது குடல் மற்றும் வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்துவதோடு, அதன் புறணியை எரிச்சலடைய செய்தும், அமில உற்பத்தியிணை அதிகரிக்கச் செய்கிறது. இதன் காரணமாகப் புண்கள் மற்றும் இறப்பை அலர்ஜியை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.
கணையம்:
நீண்ட காலமாக ஒருவர் இந்த ஆல்கஹாலை உட்கொண்டு வரும் நிலையில், அது அவரது கணையத்தின் செயல்பாட்டினைப் பாதிக்கலாம். இதனால் கணையத்தில் ஏற்படக்கூடிய வீக்கம் காரணமாக வலி மிகுந்த நிலை ஏற்படும் பட்சத்தில் அது செரிமான செயல்முறை மற்றும் குளுக்கோஸ் ஒழுங்கு முறையினைப் பாதிக்கக்கூடும்.
மூளைச் செயல்பாடுகள்:
அதிகபடியாக ஆல்கஹால் உட்கொள்ளல் என்பது நரம்புகளைப் பாதிப்பதோடு மூளையின் செயல்பாடுகளையும் பலவீனப்படுத்தும். ஏனெனில் இது ஒரு மயக்க மருந்தாகச் செயல்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சிறுநீர்ப் பரிசோதனை:
சராசரி சிறுநீர்ப் பரிசோதனையில் மது அருந்திய 12 மணி நேர வரையில் கண்டறிய முடியும். ஆனால் அதிலேயே மேம்பட்ட சோதனைகள் செய்யும் பட்சத்தில் 24 மணி நேரத்திற்கு மேலாகவும் சிறுநீரில் மது இருப்பதைக் கண்டறிய முடியும். ஆனால் சுவாச பரிசோதனைகள் மூலம் நான்கு முதல் ஆறு மணி நேரம் வரையில் கண்டறிய முடியும்.
காரணிகளைப் பொறுத்தது:
ஆல்கஹாலில் இருந்து நச்சுத்தன்மையை நீக்குவதற்கு எடுக்கும் நேரமாவது ஆல்கஹாலில் அளவு, நமது உடலில் வளர்ச்சிதை மாற்றம் எத்தனை முறை ஆல்கஹால் அருந்துகிறோம் என்பது போன்ற காரணிகளைப் பொருத்தே அமையும். இதுபோன்ற நச்சுக்களில் இருந்து குடல் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்கக் காய்கறிகள் உட்பட சீரான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
English Summary
how long takes for alcohol leave our bodies after drinking