ஏப்ரல் 24: ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா தினம்; முதன் முதலில் பிரகடனம் செய்துள்ள நியூயார்க்..! - Seithipunal
Seithipunal


பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் உலகளாவிய சேவை, சமுதாய நலப்பணிகள், கருணை, அமைதிப் பணிகளை கவுரவிக்கும் வகையில்,அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆதம்ஸ், ஏப்ரல் 24-ஆம் தேதியை ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு கொண்டாட்ட தினமாக பிரகடனம் செய்துள்ளார்.

இந்த பிரகடன அறிவிப்பை, மேயர் அலுவலக பிரதிநிதிகள் முன்னிலையில் துணை கமிஷனர் திலீப் சவுகான் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் உலக அளவில், இத்தகைய அறிவிப்பை வெளியிட்ட முதல் அரசு கவுன்சில் நிர்வாகம் என்ற பெருமையை நியூயார்க் நகரம் பெற்றுளது. அத்துடன் இந்த நிகழ்ச்சியில் சத்ய சாய் குளோபல் கவுன்சில் உறுப்பினர்களும் பங்கேற்ற்றுள்ளனர்.

குறித்த ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு கொண்டாட்ட தின நிகழ்ச்சியில் பிரசாந்தி நிலையம் மற்றும் ஸ்ரீ சத்ய சாய் மீடியா சென்டர் மூலம் தயாரிக்கப்பட்ட பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது.

இதனை, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.ஜே. ரத்னாகர், அறிக்கை வாசித்ததோடு, மனிதாபிமான அடிப்படையில் உலகம் முழுவதும் ஸ்ரீ சத்ய சாய் பக்தர்கள் மேற்கொண்ட நற்பணிகள் குறித்து இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New York has become the first city to declare April 24 as Sri Sathya Sai Baba Centenary Day


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->